புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

நேற்று (ஜூன் 20) நடைபெற்ற டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை நடத்தியிருந்தது.

அதற்கிணங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்திருந்தது.

இதையடுத்து 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுடன் ஆட்டமிழந்தது.

அதன்படி ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க