இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த நிலையில்
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 11.2 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் அவுஸ்திரேலிய அணி DLS method முறையில் 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கருத்து தெரிவிக்க