உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

வன்முறையாளர்களுக்கு 10வருட சிறை- காவல்துறை அதிபர் எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பதில் காவல்துறை மா அதிபர் சிடி விக்கிரமரட்ன எச்சரித்துள்ளார்.

தேசிய தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு சற்று முன்னர் உரையாற்றிய அவர், சட்டத்தை தமது கைகளில் எடுப்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள்.

த்துடன் அவர்களுக்கு 10 வருடங்களுக்கான சிறைத்தண்டனையை விதிக்க சட்டத்தில் இடமிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமேல் பிரதேசங்களில் நேற்று பதற்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

அது கட்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்ப்பார்த்தபோதும் இன்றும் வன்முறைகள் தொடர்ந்தன.
இதனையடுத்தே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே காவல்துறையினரின் பொறுமையை பரீட்சிக்கவேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க