இலங்கை

இலங்கையில் முழுமையாக நீக்கப்பட்டுமா ஊரடங்கு உத்தரவு?

கடந்த சில நாட்களாக இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கமைய அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அவ்வப்போது இலங்கை பூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்பட்டுவது தொடர்பாக அவதானம் செலுத்தப்படுவதாக அத்தியாவசிய தேவை தொடர்பான செயலணியின் பிரதானி பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படின் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நாடு முழுவதும் தளர்த்தப்பட்டும் என்றார்.

கருத்து தெரிவிக்க