இலங்கை

சர்வதேச சட்ட திட்டங்களை மீறி இலங்கைக்கு அனுப்பப்படும் கொரோனா நோயாளிகள்!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 505 வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களாவர். அதிலும், முக்கியமாக குவைத் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள்.
இதனை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அதில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்டவர்கள், முக்கியமாக குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டவர்கள் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிந்தும் சர்வதேச சட்ட திட்டங்களை மீறி குவைத் நாடு கொரோனா தொற்றாளர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அத்துடன் கடந்த வாரம் குவைத் தனது சொந்த விமானத்தில் பல இலங்கையர்களை தாய் நாட்டிற்கு அனுப்பி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, இதுவும் இலங்கைக்கு எதிரான திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகவும் இருக்கும் என பேசப்படுகிறது.

கருத்து தெரிவிக்க