உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

சீனா புறப்படமுன் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சீன பயணத்துக்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து விளக்கமளிப்பதற்காகவே ஜனாதிபதியால் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அகிலவிரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இதையடுத்து அந்தப் பிரதேசங்களில்  பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஜனதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, நாட்டில் எந்தப் பிரதேசங்களிலும் ஏதாவது சம்பவங்கள் நடந்தால் அதற்குப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும்,  அந்தந்தப் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுமே வகை சொல்ல வேண்டும் என்றும்,  இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்களைப் பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது பிரதமர் கூறியுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க