உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

27 பேர்கொண்ட குழுவுடன் சீனா பறந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று காலை சீனாவுக்கு பயணமானார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நாளை மறுதினம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய நாகரீகங்கள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே  ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீன பிரதமர் லி கெகியாங் உட்பட அந்நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களையும் ஜனாதிபதி சிறிசேன சந்தித்து, பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதியுடன் 27பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் சீனா புறப்பட்டுள்ளது.

47 ஆசிய நாடுகளின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் 2000 பேர் இந்த கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர் என்று நிகழ்வுக்கான அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க