உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையின் கிழக்கில் “கலீபா” மாகாணத்தை அமைக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டது.

இலங்கையின் கிழக்கில் “கலீபா” மாகாணம் ஒன்றை அமைக்க ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் எஸ் ராஜரட்ணம் சர்வதேச கற்கைகள் மற்றும் நான்யாங் பல்கலைக்கழக பாதுகாப்புத்துறை பேராசிரியர் ரொஹான் குணரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், அது பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களின் அடிப்படைவாதத்தை களைவதில் தோல்வி கண்டுள்ளது.

அத்துடன் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு மத அமைப்பும் தடைசெய்யப்படவேண்டும் என்றும் ரொஹான் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இலங்கை மண்ணில் செயற்படுவதற்கு ஸஹ்ரான் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஏனைய மதத்தலங்கள் மீது தாக்குதல்களை நடத்தி நாட்டில் பிணக்குகளை ஏற்படுத்தி அதன்மூலம் கிழக்கில் ஒரு மாகாணத்தை அமைப்பதற்கே ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டது.

ஸஹ்ரான். ஆரம்பத்தில் தீவிரவாதம் என்று தொடங்கி இறுதியில் பயங்கரவாதியாக மாறினார்.

அவர் தமிழகத்தின் தௌஹீத் ஜமாத் அமைப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

எனினும் பின்னர் அதன் தலைவர் ஜெய்னுலாப்தீனின் கொள்கைகளை மீறிவிட்டார் என்றும் பேராசிரியர் ரொஹான் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் முஸ்லிம் சமூகம் அடிப்படைவாதத்துக்கு ஆதரவளிக்காமல், ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழ முயற்சிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்துக்குள் தீவிரவாதம் முன்னெடுக்கப்படுவதை தடுப்பதில் தோல்விக்கண்டுள்ளனர் என்றும் ரொஹான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க