அமெரிக்காவில் பெரும் வன்முறை வெடிக்க காரணமான ட்ரெக் சோவென்னின் தனிப்பட்ட வாழ்விலும் பிரச்சனை வெடித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் பிளாய்ட் என்பவரை மோசடி வழக்கு ஒன்றில் சந்தேகித்து , பொலிசார் கைது செய்ய முயன்ற போது ஒத்துழைக்காத அவரை, அமெரிக்க காவல்துறையை சேர்ந்த ட்ரெக் சோவென் என்பவர் தனது முழங்காலினால் ஜோர்ஜின் கழுத்தை நெரித்து துன்புறுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியானது.
குறிப்பிட்ட இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இவரின் மரணம் அமெரிக்காவையே குலுக்கியது. எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன. மக்களின் கொந்தளிப்பை தாங்க இயலாது, ட்ரெக் சோவென் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலமை இவ்வாறிருக்க , அவரது தனிப்பட்ட வாழ்விலும் எதிர்பாராத அதிர்ச்சி தாக்கியுள்ளது. அவரது மனைவி ஹெல்லி சோவென் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அவரது வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் ஹெல்லி, ஜோர்ஜின் மரணம் தனக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க