மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷைன்பாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மெக்ஸிகோவில் சுமார் 200 வருடங்களின் பின்னர் பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
61 வயதாகும் கிளாடியா ஷைன்பாம் விஞ்ஞானியாகவும் கல்வியாளராகவும் பணியாற்றிய பின்னரே அரசியலுக்கு உட்பிரவேசித்துள்ளார்.
கடந்த 2000 – 2006 வரை மெக்ஸிகோ நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மெக்ஸிகோ ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க