புதியவைவணிக செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

இன்று (ஜூன் 04) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3,790 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,525 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் 2.3 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை 28 ரூபாவால் குறைக்கப்பட்டு 712 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க