உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

சிலாபம் நகரில் அமைதி. எனினும் ஊரடங்கு சட்டம் தொடர்கிறது

சிலாபம் நகரில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இது நாளை அதிகாலை 4 மணியுடன் விலக்கிக்கொள்ளப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

இன்று நண்பகல், சமூக வலைத்தளம் ஒன்றில் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட பதிவு ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முறுகல் காரணமாக பதற்ற சூழ்நிலை தோன்றியது.

இதனையடுத்தே காவல்துறை ஊரடங்குச்சட்டம் அங்கு பிறப்பிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க