அழகு / ஆரோக்கியம்உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

தலவாக்கலை-லிந்துலை, லிப்பக்கலை தமிழ் வித்தியாலய பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புக்கள்  நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளன

ஏனைய வகுப்புக்கள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தநிலையில் நுவரெலிய- தலவாக்கலை, லிந்துலை லிப்பக்கலை தமிழ் வித்தியால
யத்தின் பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

லிந்துலை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி திலக் ரத்நாயக்க, உதவி காவல்துறை அதிகாரி குமாரசிறி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.


பெற்றோர்களும் பங்கேற்ற இந்த நிகழ்வில், தினமும் பாடசாலையில், பெற்றோர் இருவரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது

சகல மாணவர்களையும் ஆசிரியர்களையும் உடற்சோதனை செய்ததன் பின்னரே பாடசாலையில்; அனுமதிப்பது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது

இதற்கமைய பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் தினமும் காலை ஏழு முப்பது மணிக்கு பாடசாலைக்கு சமூகம் தர வேண்டும்.

காலை எட்டு மணிக்குப் பிறகு பாடசாலையில் நுழைவாயில் மூடப்படும்


மீண்டும் நண்பகல் 12 மணிக்கு மற்றும் இரண்டும் அனைத்துமே நுழைவாயில் திறக்கப்படும்.
இந்தநிலையில் சந்தேகத்துக்கிடமாக எவர் வந்தாலும் பொதிகள் காணப்பட்டால், அவை தொடர்பில் அவதானமாக செயல்படுமாறும் இந்தக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

கருத்து தெரிவிக்க