இரத்மலானை மற்றும் மொரட்டுவ பகுதிகளைச்சேர்ந்த சமூகத்தாரரின் நலனை மேம்படுத்துவதனை இலக்காகக்கொண்டு
“சம்பந்தியாவே தஹமி சத்காரய சுவ சஹன சுகாதார முகாம்” எனும் தொனிப்பொருளில்
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு SLT Mobitel மற்றும் eChanneling நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் குழுவுடன் இணைந்து இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இத்திட்டத்தினூடாக கடந்த மே 19ம் திகதி இரத்மலானை மற்றும் மொரட்டுவ பகுதிகளில் வசிக்கும் பிரதேசவாசிகளுக்கு இலவச குருதி, நீரிழிவு பரிசோதனை, கண் பரிசோதனை, மூக்குக்கண்ணாடி வழங்கல் மற்றும் ECG பரிசோதனை செய்யப்பட்டதோடு போசனை தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.
மேலும் இந்நிகழ்வில் SLT சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர்,மொபிடெல் பிரதம வணிக அதிகாரி,வணிக அபிவிருத்தி தலைமை அதிகாரி,SLT மெட்ரோ 02 மாகாண செயற்பாடுகள் பிரதி பொது முகாமையாளர் மற்றும் நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து தெரிவிக்க