இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாளொன்றுக்கு சிகரெட் பாவனையால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாளை (31) உலக புகையிலை எதிர்ப்பு தினமானது புகையிலைத்தொழிலின் குறுக்கீட்டிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பது என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது குறித்து மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையின்படி இலங்கையில் சிகரெட் பாவனையால் நாளொன்றுக்கு 50 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதோடு இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனையானது வேகமாக குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் பாடசாலை மாணவர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் திரு.சந்தன டி சில்வா தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க