உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

உலகின் வலுவான ஜனநாயக நாடுகள் இஸ்ரேலை எதிர்க்க முடியாது – கொலம்பியா ஜனாதிபதி தெரிவிப்பு

காசாவில் இஸ்ரேலின் யுத்தத்திற்கு எதிராக வெளிப்படையாக கருத்துக்களை கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ தெரிவித்து வருகின்றார்.
இதன் போது உலகின் வலுவான ஜனநாயக நாடுகள் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் உள்ளனவென கொலம்பியா ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ தெரிவித்துள்ளார்.

காசாவில் இடம்பெறும் படுகொலைகளை ஆதரிக்கும் ஜனநாயக நாடுகளில் உள்ள வங்கி நிதி அமைப்புக்களினது உரிமையாளர்கள் காரணமாக இஸ்ரேலை எதிர்த்து நிற்க முடியாமல் போகுமென கொலம்பியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும்
இச்செயற்பாடானது பாலஸ்தீன மக்களுக்கு மாத்திரமின்றி அனைத்து மக்களுக்குமே ஆபத்தை விளைவிக்கக்கூடுமென கொலம்பியா ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க