ஜனாதிபதியின் சட்டத்தரணி திரு.காமினி மாரப்பன இன்று (25) காலை காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று (25) காலை காமினி மாரப்பன காலமானாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு.காமினி மாரப்பன முன்னாள் அமைச்சர் திரு.திலக் மாரப்பனவின் சகோதரருமாவார்.
பல சர்ச்சைக்குரிய வழக்குகளை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி திரு.காமினி மாரப்பன 2021 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
மறைந்த திரு.காமினி மாரப்பனவின் இறுதிக்கிரியைகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க