உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவல்

வியட்நாம் மத்திய ஹனோய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று(மே 25) ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வியட்நாமின் தலைநகரில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பிரதேசமான காவ் கியே மாவட்டத்தில் உள்ள கட்டிடத்திலிருந்து புகை மற்றும் நச்சு வாயு வெளியேறிய நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தீ விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க