ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாளை சீனாவுக்கு செல்கிறார்.
இலங்கையில் பிரச்சனைகள் இன்னும் முடிவுக்கு வராதநிலையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் குறித்து இலங்கையின் அரசியல் மற்றும் ராஜதந்திரிகள் கேள்வி எழுப்புவதாக ஆங்கில ஊடகம் ஒன்று விமர்சனம் வெளியிட்டுள்ளது.
ஆசியான் நாகரீகங்கள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்ளும் மைத்ரிபால, சீன ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு, அவரின் விஜயத்தின் அங்கமாக இல்லாதபோதும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மைத்ரிபால சிறிசேன தமது சீன விஜயத்தின்போது பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிப்பாரா? என்பது குறி;த்து இன்னும் தகவல்கள் இல்லை.
கருத்து தெரிவிக்க