உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் போர்க்குற்றம்: மஹிந்த- மைத்ரி மீது லண்டனில் குற்றச்சாட்டு.

மஹிந்த ராஜபக்ச நிர்வாகம் முதல் தற்போதைய மைத்ரிபால சிறிசேன நிர்வாகம் வரையிலான காலப்பகுதி நடவடிக்கைகள் தொடர்பில் லண்டனில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

போர்க்குற்றங்கள் தொடர்பிலான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைக் காணவில்லை என்று இந்த கலந்துரையாடலின்போது பலரும் கருத்துரைத்தனர்.

“ராஜதந்திர வரப்பிரசாதத்துக்கு எதிரான சட்ட நுணுக்கங்கள்” என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரச்சனைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான நீதிக்கான நிலையத்தின் தலைவரான தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா இதற்கு தலைமை தாங்கினார்.

இதன்போது கருத்துரைத்த அவர் கோட்டாபய ராஜபக்ச, இராணுவ அதிகாரிகளான ஜெகத் ஜெயசூரிய மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக தாம் பல்வேறு சட்டமுயற்சிகளை மேற்கொண்டபோதும் அவை ராஜதந்திர வரப்பிரசாதம் காரணமாக பலனளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க