புதியவைவிளையாட்டு செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை 2024 தொடங்குவதற்கு இன்னும் சரியாக 9 நாட்கள் உள்ள நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும் 20 நாடுகளும் தீவிரமாக தன்னை தயார்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று (மே 21) பங்களாதேஷ் மற்றும் அமெரிக்கா இடையிலான முதல் டி 20 போட்டியானது அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் நடைபெற்றிருந்தது.

இப்போட்டியின் இறுதி கட்டத்தில் அமெரிக்கா 19.3 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து பங்களாதேஷை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றிருந்தது.
அதற்கிணங்க அமெரிக்கா டி 20 கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக பெற்ற வெற்றியாகும்.

கருத்து தெரிவிக்க