இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வதிவிட வீசாக்களை பெற்றுக்கொள்வதற்கு இனிவரும் காலங்களில் இலங்கை புலனாய்வுப்பிரிவின் பரிந்துரையைப்; பெறவேண்டும்.
இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சே இந்த வீசாக்களுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
இலங்கையில்; வதிவிட வீசாக்களுக்காக தற்போது 1000 பேர் வரை காத்திருக்கின்றனர்.
இதில் மாலைத்தீவு நாட்டினரும் அடங்குகின்றனர்.
கணக்கெடுப்பு ஒன்றின்படி சுமார் 8ஆயிரம் மாலைத்தீவு மாணவர்கள் தமது பெற்றோருடன் இலங்கையில் தங்கியுள்ளனர்.
ஏற்கனவே மதப்பணிகள் என்ற அடிப்படையில் முஸ்லிம் விவகார அமைச்சின் பரிந்துரையின்கீழ் பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஸ், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள 200 பேர் வதிவிட வீசாக்களை பெற்றுள்ளனர்.
கருத்து தெரிவிக்க