ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி ஆகியோரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவிட்ட பதிவில் தன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் மறைவிற்கு இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்ராஹிம் ரைசி மற்றும் அமீர் அப்துல்லாஹி குடும்பத்தினருக்கும், ஈரான் நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்கொள்கின்றேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன் X கணக்கு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க