இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய மற்றும் ஒழு குழு தொடர்பில் இராணுவம் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
இந்தக்குழுவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான விடயங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்ததாக நம்பப்படுகிறது.
“ஜம்மியத்துல மிலாத்துல் இப்ராஹிம்” என்ற இந்த அமைப்புக்கு உமர் மொஹமட் என்பவர் தலைமை தாங்கி வந்தார். இவர் தற்போது கைது செய்யப்பட்டு தடு;த்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தக்குழுவினர், சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போராடவேண்டும் என்றக் கொள்கையை கொண்டிருந்தனர்.
எனினும் இதில் கொள்கை முரண்பாடு ஏற்பட்டமையால். குழு ஒன்று பிரிந்து சென்று தேசிய தௌஹீத் ஜமாத்தில் மொஹமட் காசிம் மொஹமட் ஸஹ்ரானுடன் இணைந்தனர்.
இந்தக்குழு எப்போதும் “வாழு வாழவிடு” என்ற கொள்கையை கடைபிடித்து வந்தது.
2017ஆம் ஆண்டளவில் ஸஹ்ரான், இலங்கையின் காவல்துறையினரால் தேடப்பட்டபோது அவர், பாதுகாப்பான இடம் ஒன்றில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான மிகவும் தீவிரம்மிக்க விடயங்களை இணைங்களில் பிரசுரித்து வந்தார்.
அவரின் மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இதற்கு ஆதாரங்கள் உள்ளன.
இந்தநிலையில் ஸஹ்ரான் பாலியல் விடயங்களில் மோசமானவர் என்றும் நிதிகளை பிழையான வழிகளில் செலவிடுகிறார் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தலைமைத்துவத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
எனினும் அவரின் பின்னால் அதிகமானோர் இருந்தனர்.
அவர் காவல்துறையினருக்கு பயந்து மறைந்திருந்தபோது அமைப்பின் பதில் தலைவராக தௌபீக் மௌலவி பொறுப்பேற்றார்.
இதேவேளை ஸஹ்ரானுடன் இணைந்து இணையத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்ட நௌபர் தற்போது சவூதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மற்றும் ஒருவரான மிஸ்லானும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க