இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பெற்றோர் பராமரிப்பில் வளர்ந்த பிள்ளைகள் தற்போது கையடக்க தொலைபேசி மற்றும் இணைய பாவனையில் தங்கள் பொழுதினை கழிக்கின்றனர்.இதில் நன்மைகள் இருந்தாலுமே தற்போது அமெரிக்க அமைப்பொன்று வெளியிட்ட அறிக்கையின் படி இலங்கையில் இணைய வழி சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அவ்வறிக்கையை ஆதாரமாக கொண்டு தற்போது
நீதிமன்றம் சென்ற பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், இணையத்தில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக 55 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

2021, 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுகளில் துஷ்பிரயோகத்திற்காக சிறார்களை இணையத்தளங்களில் கோருவது 300 சதவீதம் அதிகரித்துள்ளது என அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்கள் தொடர்பான தேசிய மையம் வௌிப்படுத்தியுள்ளது.

சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க