சினிமாபுதியவை

பழைய நடிகர் மைக் மோகன், இத்தனை ஆண்டுகளாக நடிக்காதது குறித்து விவரம்!

தமிழ் திரையுலகின் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்த நடிகர் மோகனின் நடிப்பில் உருவாகியிருக்கும்
கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ள ‘ஹரா’ திரைப்படத்தை ஜூன் 7ஆம் திகதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாகக்
நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய மோகன்,
“இத்தனை ஆண்டுகள் ஏன் நடிக்கவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். என்னைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், எனக்குக் கதை பிடித்தால் மட்டுமே நான் நடிப்பேன். விஜய் ஸ்ரீ அவர்கள், 7 முறை கதையைத் திருத்திய பிறகு தான் இந்தப்படம் ஒத்துக்கொண்டேன். இந்தப்படத்திற்குக் கோவை மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு வியப்புக்குரியது, அத்தனை மக்களுக்கும் எங்கள் நன்றி” என்றும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க