உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகள் கிழக்கு ஆசியாவை நோக்கி – சர்வதேச ஆய்வாளர்கள்

சிரியாவில் தமது பலத்தை இழந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது சர்வதேச ரீதியாக உள்ளுர் மக்களை பயன்படுத்தி தமது நோக்கத்தை அடையமுயற்சிக்கின்றனர்.

இந்தக்கருத்தை, சர்வதேச அரசியல் ஆய்வாளரான கொலின் பி. கிளார்க் வெளியிட்டுள்ளார்.

இதன்படியே இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவை பொறுத்தவரை அங்கு பாதுகாப்பு நிலைமைகள், இறுக்கமாக உள்ளன.

எனவே இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளையே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இலக்காகக் கொள்வர் என்றும் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இஸ்ரேலின் அரசியல் ஆய்வாளர் எலெ கார்மொன், இலங்கையின் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் நேரடியாக சம்பந்தப்பட்டதா? என்பது தொடர்பில் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

எனினும் உள்ளுர் குழுக்களுடன் இருக்கும் தொடர்புகளைக் கொண்டு இதனை மேற்கொண்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க