உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா (Tesla) நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று (05.04) எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
Bloomberg நிறுவனத்தின் நேற்றைய மதிப்பீட்டின் படி, எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 198 பில்லியன் டொலராக குறைந்துள்ள நிலையில், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமேசான் பங்கு மதிப்பு இருமடங்கு உயர்ந்தது. அதேசமயம், 2021-க்குப் பிறகு எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 50 சதவீதம் சரிவைக் கண்டது. இதனால், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு எலான் மஸ்கை நெருங்கியது. இந்நிலையில், தற்போது எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதல் இடம் பிடித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க