இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

புத்தாண்டை இலக்காகக் கொண்டு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!!

இன்று (08.04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாகவும்
ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

மேலும், ஒரு கிலோ கிராம் பூண்டு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 680 ரூபா என்பதுடன், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாக குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

கருத்து தெரிவிக்க