கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு கலால் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விசாரணைகளின் பின்னர், இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், தரம் பாராமல் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 08 சந்தேக நபர்களும் 45 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து தெரிவிக்க