இன்று (18.03) இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக Janith Liyanage ஆட்டமிழக்கமால் 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taskin Ahmed 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி பங்களாதேஷ் அணிக்கு 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க