புதியவைவெளிநாட்டு செய்திகள்

இன்று (15.03) ரஷ்யாவில் அதிபர் தேர்தல் ஆரம்பம்!!

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தேர்தலில் 11.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 இலட்சம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்லைன் மூலம் வாக்களிக்கும் முறைமை முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நிகோலாய் கரிடோனோவ்-வின் கம்யூனிஸ்ட் கட்சி, லியோனிட் ஸ்லட்ஸ்கி-யின் தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, விளாடிஸ்லாவ் தவன்கோவ்-வின் புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

ஆனால் புதினை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லை என்பதால், அவர் 5 ஆவது முறையாக அதிபராக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதின் 76.7% வாக்குகள் பெற்றிருந்தார். அரசியல் சாசனத் திருத்தத்தின் படி புதினால் வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பொறுப்பு வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க