புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை அணி வெற்றி இலக்கு!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாவது ஒருநாள்
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்ததுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்க்ப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய டவ்ஹித் ஹ்ரிடோய் 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
சௌம்யா சர்க்கார் 68 ஓட்டங்களையும், அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் வனிந்த ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும் மற்றும் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

கருத்து தெரிவிக்க