கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நிறைவேற்றும் வேளையில், சட்டத்தரணியின் நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சட்டத்தரணி ஒருவரை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று (15.03) உத்தரவிட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று 2022 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரஷ்ய Aeroflot விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவை கையளித்த சட்டத்தரணி, சட்டத்தரணிகளின் நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க