உலகம்

கொரோனா பாதிப்பால் பல கோடி குழந்தைகள் வறுமையில் வாடுவார்கள் — யுனிசெப் எச்சரிக்கை

கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக யுனிசெப் நிறுவனமும், ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ என்ற அமைப்பும் இணைந்து ஆய்வு மேற்கொண்டதில், கொரோனா நோய் தொற்று பரவலால் பல நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு இறுதியில் 8.6 கோடி சிறுவர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள். இது வழமையை விட 15 சதவீதம் அதிகமாகும். பொருளாதார நெருக்கடியில் இருந்து குடும்பங்கள் பாதுகாக்கப்படாவிட்டால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தேசிய வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கை 67.2 கோடியாக அதிகரிக்கும்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு சிறுவர்கள் சஹாரா, ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர். ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதிலும் உள்ள நாடுகளில் உள்ள பிரதேசங்களில் 44 சதவீதம் வரை இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். குறுகிய காலத்திற்கு பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கூட குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க