நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய விலைகள் நேற்று (8.03) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 125 ரூபாவினால் குறைத்து புதிய விலை 935 ரூபாயாகவும், காய்ந்த மிளகாய் கிலோ கிராம் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைத்து புதிய விலை 1,175 ரூபாயாகவும்,வெள்ளை அரிசி கிலோ கிராம் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைத்து பதிய விலை 195 ரூபாயாகவும்,ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 3 ரூபாவினால் குறைத்து புதிய விலை 272 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க