இந்த பட்டியலில் டெஸ்லா (Tesla) நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று (05) எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
Bloomberg நிறுவனத்தின் நேற்றைய மதிப்பீட்டின் படி, எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 198 பில்லியன் டொலராக குறைந்துள்ள நிலையில், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இப்பட்டியலில் Louis Vuitton நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ( Bernard Arnault) 197 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 179 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 150 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.
115 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 11 ஆம் இடத்திலும் 104 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி 12 ஆம் இடத்திலும் உள்ளனர்.
கருத்து தெரிவிக்க