இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதன்கிழமை (06.03) காலை இடம்பெற்ற அசிட் வீச்சினால் ஐவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கு ஒன்றுக்காக வந்த ஒருவர், வீதியில் பயணித்த அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரியின் புதிய நகரத்தில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பிரதான பிரதிவாதியை இலக்கு வைத்தே அசிட் வீச்சு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து தெரிவிக்க