நேற்று (05.06) உலகெங்கும் சுமார் ஒரு மணி நேரம் Meta நிறுவனத்தின் Facebook, Instagram, Messenger, Threads ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியதால்
பயனர்கள் கருத்து பரிமாற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.
ஒரு மணித்தியாலத்தின் பின் சமூக வலைத்தளங்கள் வழமைக்குத் திரும்பியதுடன்,
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவ்வாறு இடம்பெற்றதாக Meta தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் Meta நிறுவன அதிபர் மார்க் சக்கர்பெர்கின் (Mark Zuckerberg) நிகர மதிப்பு சுமார் 3 பில்லியன் டொலர்கள் வரை குறைவடைந்துள்ளதாக Bloomberg Billionaires Index தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க