மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒன்றுகூடவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை கடந்த 22 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன்இந்த திருத்தத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க