இலங்கையின் சிறந்த பத்து பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனதேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தரம் உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எஸ். எல். ஈ. எஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக மூவர் எஸ்.எல்.ஈ.எஸ் தரம் மூன்று உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள்.வடமாகாணத்திலேயே பிரதி அதிபர் பதவிக்கு மூன்று எஸ்.எல்.ஈ.எஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளமை இப் பாடசாலைக்கு மட்டுமே ஆகும்.
அத்துடன், வடக்கின் யாழ் மாவட்டத்தில் இருந்து வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ் இந்துக் கல்லூரி என்பனவும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.இந்த தரம் உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எச்.எல்.ஈ.எஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக இருவர் எஸ்.எல்.ஈ.எஸ் தரம் மூன்று உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள்.
கருத்து தெரிவிக்க