நாடளாவிய ரீதியில் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதுடன் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
சுகாதார ஊழியர்கள், நிறைவுகாண் வைத்திய ஊழியர்கள், தாதியர்கள் என சில தரப்பினர் தாம் வசிக்கும் பகுதிகளில் வைத்தியர்களை போன்று செயற்பட்டு சிகிச்சைகளை வழங்குகின்றமையை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க