இந்த வருடம் சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக சேவையில்லாமலிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு பிராந்தியத்தில் மாத்திரம் இவ்வாறான 103 சேவையில் ஈடுபடாத பேருந்துகள் உள்ளதாகவும், அந்த பேருந்துகளின் பதிவை இரத்து செய்யுமாறு அவற்றின் இலக்கங்களுடன் கூடிய அறிக்கை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க