இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கொழும்பின் நீர்நிலைகளில் முதலைகள் நடமாட்டம்

கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் முதலைகள் உலா வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால், அவற்றை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

பொல்கொட ஆறு முதலைகளின் வாழ்விடமாக உள்ளது, மேலும் கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் நீரோடைகளில் பெருமளவிலான முதலைகள் வாழலாம். அதன்படி, தியவன்னாவ, போல்கொட ஏரி தெற்கு மற்றும் களனி கங்கை ஆகியவை முதலைகளின் வாழ்விடங்களாகக் காணப்படுகின்றன என்று வன ஜீவராசிகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்

கருத்து தெரிவிக்க