இன்று (13) காலை 6:30 மணி முதல் மீண்டும் 72 சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் (12) நிதியமைச்சுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து 72 சுகாதார சேவைகள் தொழிற்சங்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளன.
சுகாதார துறையின் வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டதை எதிர்த்து இப் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தேவையேற்படின் சுகாதார சேவைகளை தடையின்றி முன்னெடுக்க இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க