இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

முல்லைத்தீவில் வாகன விபத்து 6 பேர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12.02) 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க