இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்வணிக செய்திகள்

இன்று தொடக்கம் முட்டை விலை அதிகரிப்பு

இன்று (12.02) தொடக்கம் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்க செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்துள்ளார்.

முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 63 ரூபாவாகவும் அதிகரிக்கலாம் என சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க