சினிமாசினிமா

சசிகுமாரின் ‘பிரீடம்’ (Freedom) படத்தின் போஸ்டர் வெளியீடு!

இயக்குனர் சத்ய சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரீடம்’ (Freedom). இந்த படத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தவிர மற்ற மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

 

கருத்து தெரிவிக்க