75 வயதான மூன்றாம் சார்லஸ் மன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது.
புற்றுநோயின் வகை இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் இது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல எனவும் ஆனால் புரோஸ்டேட் வீக்கம் தொடர்பான அவரது சமீபத்திய சிகிச்சையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லஸ் மன்னர் திங்களன்று தனது வழக்கமான சிகிச்சையை மேற்கொள்வார் என்றும், சிகிச்சையின் போது தன் பொது கடமைகளை ஒத்திவைப்பார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.
75 வயதான மூன்றாம் சார்லஸ் மன்னர் விரைவில் முழு பொதுப் பணிக்குத் திரும்புவதை எதிர்பார்ப்பதாகவும் பக்கிங்ஹம் அரண்மனை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க