சமீபத்திய செய்திகள்சினிமாசினிமாவெளிநாட்டு செய்திகள்

அரசியல் கட்சியை தொடங்கும் மற்றுமொரு நடிகர்!

நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில்,  விஜய்யை தொடர்ந்து மற்றும் ஒரு நடிகரான விஷாலும் அரசியல் கட்சியை தொடங்க  முடிவெடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை “விஷால் மக்கள் நல இயக்கம்” என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை எடுத்துள்ள விஷால், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பார் என்றும் சட்டமன்ற தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கருத்து தெரிவிக்க